பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

வீடுகளுக்குள் புகுந்து பல சொத்துக்களைத் திருடிய நபர் ஒருவர் மட்டக்குளிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ, மினுவாங்கொட, வத்தளை, மஹாபாகே ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள், வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் பல பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4