பணிப்பெண்ணை தாக்கிய கந்தானை வர்த்தக தம்பதியினர் கைது!

#SriLanka #Arrest
Prathees
2 years ago
பணிப்பெண்ணை தாக்கிய கந்தானை வர்த்தக தம்பதியினர் கைது!
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை தம்பதியினர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகளில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 இந்த நிலையில், அவர்கள் குறித்த தகவலைப் பெற்ற பொலிசார் தம்பதியை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (14) இரவு கைது செய்யப்பட்ட தம்பதியினர் கந்தானையில் இருந்து இயங்கும் KD Express எனும் கூரியர் சேவை நிறுவனத்தின் உரிமையாளர்கள் எனவும், கசுன் மதுஷங்க மற்றும் பிரஹர்ஷனி அருணாலி என சமூக ஊடகங்கள் ஊடாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 அவர்கள் ஊழியரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த நிறுவன உரிமையாளர் அந்த இளம் பெண்ணை முதலில் தாக்குவதுடன், அப்போது அமர்ந்திருந்த பெண்ணும் எழுந்து சென்று தாக்கியுள்ளார்.

 பின்னர் இருவரும் பிளாஸ்டிக் நாற்காலிகளால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

 தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும், ஆனால் 119 இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (15) வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4