அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வா?

#SriLanka #government #Staff
Prathees
2 years ago
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வா?

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம, நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் கிளைச் சங்கங்களின் மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 "கடந்த ஆண்டை விட நிலைமை வேறு. இன்று மின்வெட்டு இல்லை. எரிவாயு இருக்கிறது. எண்ணெய் இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பொருட்களின் விலை இன்னும் குறையும்.

முதலில் மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகி வருகிறது என்பதை நினைவூட்ட வேண்டும். சர்வதேச நாணயத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டோம். நிதி மற்ற நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. 

மாதத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்வரும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4