வெளியானது நானியின் ஹாய் நான்னா பட டீசர்!

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #trailer #Movie
Mani
2 years ago
வெளியானது நானியின் ஹாய் நான்னா பட டீசர்!

தந்தை - மகளுக்கு இடையேயான பாசப் போரட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ஹாய் நான்னா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தெலுங்கு நடிகரான நானி, பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் நான்னா படத்தின் பாடல்களும் முன்னோட்ட காட்சியும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் ஹாய் நான்னா திரைப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.

ஹாய் நான்னா படத்தில் நானி உடன் சீதா ராமம் படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ளார். குழந்தை கதாபாத்திரத்தில் பேபி கியாரா நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சவுரவ் இயக்கியுள்ள ஹாய் நான்னா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், படத்தில் ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குஷி படத்தின் இசையமைப்பாளர் ஹேசாம் அப்துல் வஹாப் இசைமைத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4