சிம்ம ராசியினர் உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
சிம்ம ராசியினர் உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாப நிலை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும். கார்த்திகை 1: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும். அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். ரோகிணி: ஆரோக்கியம் மேம்படும். விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். மிருகசீரிடம் 1,2: அடுத்தவர் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மனதில் உண்டான குழப்பம் விலகும். பிள்ளைகள் வழியில் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும். புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பூசம்: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவுகள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

மகம்: நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். பூரம்: உங்கள் திறமை வெளிப்படும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியமாகும். உத்திரம் 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செலவுகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: பண விஷயத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்சினை உங்களுக்கு சாதகமாகும். அஸ்தம்: துணிச்சலாக செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: எதிரிகளால் உண்டான நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். சுவாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். பண நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருங்கள். கேட்டை: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.

தனுசு

மூலம்: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். பூராடம்: எதிர்கால நலனைக் கருதி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். திருவோணம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள்..

கும்பம்

அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம்: உடல்நிலையில் சங்கடங்கள் தோன்றும். தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்களுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும். அதனால் மனதில் குழப்பம் தோன்றும். ரேவதி: உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வாகனத்தை இயக்குவதில் கவனம் அவசியம்.