நிலத்தில் இருந்து அசாதாரண சத்தம்: வெளியேற்றப்பட்ட சுமார் 50 குடும்பங்கள்

#SriLanka #NuwaraEliya
Mayoorikka
2 years ago
நிலத்தில் இருந்து அசாதாரண சத்தம்: வெளியேற்றப்பட்ட சுமார் 50 குடும்பங்கள்

கொத்மலை வெத்தலாவ கிராமத்தில் நிலத்தில் இருந்து அசாதாரண சத்தம் கேட்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததையடுத்து சுமார் 50 குடும்பங்கள் கடந்த 15ஆம் திகதி இரவு பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 மலையில்லாத சமவெளியில் இக்கிராமம் அமைந்துள்ளதாகவும், மைதானத்தினுள் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு சத்தங்கள் கேட்டு வருவதாகவும் கிராம மக்கள் பிரதேச செயலாளருக்கு தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1697436627.jpg

 எவ்வாறாயினும், இந்நிலைமை அச்சமடையத் தேவையில்லை எனவும், கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4