ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வருகிற 21-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவிப்பு!

#India #2023 #ImportantNews #Scientist #Rocket #Space #ISRO #Indian
Mani
1 year ago
ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வருகிற 21-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவிப்பு!

அக்., 21ம் தேதி காலை, 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007ல், 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டது.

கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு ககன்யான் என, பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியிலிருந்து, 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

இதற்கு முன் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. ககன்யான் முதல்கட்ட சோதனைக்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளன. தற்போது விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் பணி தொடர்பான பாதுகாப்பு சோதனை நடந்து வருகிறது. அக்., 21ம் தேதி காலை, 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!