இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம், வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் இலங்கையின் காலநிலையை பாதிப்பதாக தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக  இலங்கையின் பலப் பகுதிகளில் தற்போதைய மழை நிலைமையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4