இஸ்ரேலில் பயணக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் - இலங்கை வலியுறுத்தல்!

#SriLanka #Israel #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேலில் பயணக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் - இலங்கை வலியுறுத்தல்!

காசாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் இராணுவ நடவடிக்கையால் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள  இலங்கை, காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்துள்ளது.  

இஸ்ரேலில் உள்ள பொதுமக்களை குறிவைத்து ஹமாஸ் நடத்திய வன்முறை பயங்கரவாதத் தாக்குதல்களை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது. 

மேலும் காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா விக்கிரமசிங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

images/content-image/1697514282.jpg

உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை சுதந்திரமாக நகர்த்துவதற்கு இலங்கை அழைப்பு விடுப்பதாகவும், மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்துத் தரப்பையும் அழைப்பதாகவும் அவர் கூறினார். 

அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ தங்கள் இலக்குகளை அடைவதற்காக வன்முறையில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் இலங்கை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4