பியகம பிரதேசத்தில் புதிதாக உருவாகவுள்ள வைத்தியசாலை!

#SriLanka #Hospital #children #doctor
Mayoorikka
2 years ago
பியகம பிரதேசத்தில் புதிதாக உருவாகவுள்ள வைத்தியசாலை!

பியகம பிரதேசத்தை மையப்படுத்தி சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.

 இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பான தொடர் கலந்துரையாடல் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தலைமையில் இடம்பெற்றது.

images/content-image/2023/10/1697533991.jpg

 இக்கலந்துரையாடலில் தற்போதைய சவால்கள் மற்றும் திட்டம் தொடர்பான தற்போதைய திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

 பியகம வைத்தியசாலையுடன் இணைந்து ஆரோக்கிய கிராமம் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4