வரும் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Tamil Nadu
#Tamil People
#Rain
#HeavyRain
#2023
#Tamilnews
Mani
1 year ago
தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி. மீ. மழையும் நவம்பரில் 178.8 மி.மீ , டிசம்பரில் 92 மி.மீ. மழையும் பெய்வது இயல்பானதாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மி.மீ மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.