கும்ப ராசியினரின் புகழுக்கு சோதனை உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
கும்ப ராசியினரின் புகழுக்கு சோதனை உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உங்களது எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும். பரணி: சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பேச்சில் கவனம் தேவை. கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினை காணாமல் போகும். மிருகசீரிடம் 1,2: திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள். பெரியவர்களின் உதவியை பெறுவீர்கள். திருவாதிரை: எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். பண வரவு அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்சினை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். ஆயில்யம்: பெற்றோர் ஆதரவுடன் நீண்டநாள் முயற்சி ஒன்று அனுகூலமாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்குள் சில பிரச்சினைகள் தோன்றும். அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். நிதிநிலை உயரும்.

துலாம்

சித்திரை 3,4: பண வரவு அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்வீர்கள். திருமண வயதினருக்கு வீடுதேடி வரன் வரும். விசாகம் 1,2,3: எதிர்பாராத வருவாயை அடைவீர்கள். நண்பர்கள் துணையுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மனதை அலை பாய விடுவதால் சங்கடம் தோன்றும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். கேட்டை: பொதுப் பிரச்சினை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்திராடம் 1: செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளிப்பீர்கள். திருவோணம்: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். சதயம்: உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உங்கள் புகழுக்கு சோதனை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் நிதானம் தேவை. வார்த்தைகளால் சில சங்கடங்கள் தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4: நேற்று வரை இருந்த சங்கடங்கள் விலகும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் லாபம் காண்பீர்கள். உத்திரட்டாதி: உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். ரேவதி: வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்த செய்த வரும். சிலர் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.