கல்முனையில் பாவனைக்கு தகுதியற்ற 2500 கிலோ கொத்தமல்லி அழிப்பு

#SriLanka #Court Order #Lanka4
Prathees
2 years ago
கல்முனையில் பாவனைக்கு தகுதியற்ற 2500 கிலோ கொத்தமல்லி அழிப்பு

கல்முனையில் கொத்தமல்லியை கந்தகத்தால் மெருகேற்றிய பின்னர் அதனை பாவனைக்கு மீண்டும் சந்தைக்கு விடுகின்ற இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 நுகர்வோர் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 பின்னர், நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரியெல்ல அவர்களின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ், அம்பாறை மாவட்ட அலுவலக புலனாய்வு அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து, கொத்தமல்லிக்கு சீல் வைத்தனர்.

 கல்முனை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திடம் இருந்து கொத்தமல்லி தொடர்பான அறிக்கையை வரவழைத்த நீதிமன்றம், இந்த கொத்தமல்லியில் கந்தகம் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன் பின்னர் கல்முனை நீதிமன்ற நீதவான் பிரதிவாதிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்ததுடன் 2500 கிலோ கொத்தமல்லியை அழிக்கவும் உத்தரவிட்டார், இதன் பெறுமதி இருபத்தைந்து இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4