கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருவர் கைது : வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்பு!

#SriLanka #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருவர் கைது : வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்பு!

கொலை முயற்சி குற்றச்சாட்டில் களனி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17.10) மாலை கடவட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும் 4. தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்த. 

24 மற்றும் 29 வயதுடைய மேகவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4