இரண்டு முக்கிய அமைச்சுப் பதவிகளில் வரவுள்ள மாற்றம்: மாற்ற தயாராகும் ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Parliament #Ranil wickremesinghe #Health Department
Mayoorikka
2 years ago
இரண்டு முக்கிய அமைச்சுப் பதவிகளில் வரவுள்ள மாற்றம்: மாற்ற தயாராகும் ஜனாதிபதி

முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட பிரேரணையின் பின்னர் அமைச்சரவையை மாற்றியமைக்கவும், அதியுயர் பாதுகாப்பு பதவிகளை மாற்றவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 தனிப்பட்ட அமைச்சுக்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் உயர் பாதுகாப்பு பதவிகளை மாற்றுவதற்கான கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இவ்வாறு மாறப்போகும் இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகள்தான் சுகாதார அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி.

images/content-image/2023/10/1697607907.jpg

 சுகாதார அமைச்சு சில மாதங்களாக நெருக்கடியான நிலையில் காணப்படுவதுடன் விளையாட்டுத்துறை அமைச்சிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

 இரண்டு அமைச்சுக்களும் ஏனைய அமைச்சர்களின் கீழ் வைக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4