சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள இரண்டாம் கட்டம்!

#SriLanka #International #Ranjith Siambalapitiya
PriyaRam
2 years ago
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள இரண்டாம் கட்டம்!

இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆழமான பொருளாதார நெருக்கடியை இலங்கையால் ஒரே இரவில் சமாளிக்க முடியாது என்றும், எனவே ஸ்திரத்தன்மை மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகளுடன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

images/content-image/2023/10/1697607822.jpg

கடந்த வருடம் இலங்கையில் இருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது என்றும் சில வேறுபாடுகளை களைவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான விவாதங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4