போராட்ட நாளில் லியோ திரைப்படக் காட்சிகளை இலங்கையில் நிறுத்துமாறு வெளியான சர்ச்சைக் கடிதம்!

#SriLanka #Protest #Actor #Vijay #Movie
PriyaRam
2 years ago
போராட்ட நாளில் லியோ திரைப்படக் காட்சிகளை இலங்கையில் நிறுத்துமாறு வெளியான சர்ச்சைக் கடிதம்!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கத்திற்கும் கதவடைப்பிற்கும் தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறும் தினத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரம் ஒன்று பரவி வருகிறது.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் தாம் யாருக்கும் அனுப்பவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

images/content-image/2023/10/1697609490.jpg

இவ்வாறான நிலையில், வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை நேர்மையாக ஆற்றியதன் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4