நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை!

#SriLanka #Sri Lanka President #Parliament #wijayadasa rajapaksha
PriyaRam
2 years ago
நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இலங்கையில், நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தையே தாம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1697612014.jpg

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது முற்றிலும் பொய்யான ஒரு விடயம் எனவும், தமக்கு அப்படி செய்ய வேண்டிய தேவையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் செய்ய முடியுமான செயற்பாடுகளை மட்டும்தான் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4