லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

#SriLanka #Sathosa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் நாளை (19.10) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாவாகும்.

இதேவேளை, உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 545 ரூபாவாகும்.

ஒரு கிலோ பச்சை பீன்ஸ் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெண்டைக்காய் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும்.

ஒரு கிலோ கொத்தமல்லியின் புதிய விலை 10  ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4