இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள சீன உளவாளிகள்!

#India #China
PriyaRam
2 years ago
இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள சீன உளவாளிகள்!

நேபாளம் ஊடாக சீன உளவாளிகள் இந்தியாவுக்குள் நுழைவதாக இந்தியாவின் முன்னணி உளவு அமைப்பான ரோ (RAW) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இந்திய இணையத்தளம் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு RAW குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேபாள கடவுச்சீட்டை பயன்படுத்தி சீன உளவாளிகள் இந்தியாவின் புனே, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்குள் ஊடுருவியுள்ளனர்.

images/content-image/2023/10/1697630823.jpg

குறித்த சீன உளவாளிகள் சாமானியர்களைப் போன்று செயற்படுவதாகவும் RAW தெரிவித்துள்ளது. இந்த சீன உளவாளிகள் ஹிந்தி, ஆங்கில மொழியை சரளமாக பேசும் திறமை கொண்ட சிறந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். 

னவே குறித்த சீன உளவாளிகளை கண்டறிய முடியாதுள்ளதாகவும் RAW தெரிவித்துள்ளது. சீன உளவாளிகளின் நோக்கம் உளவுத் தகவல்களை சேகரிப்பது அல்ல எனவும், பொருளாதார நெருக்கடி நிலைமையைத் தோற்றுவித்து, இந்திய கொள்கை வகுப்பில் தாக்கம் செலுத்துவதே அவர்களின் நோக்கம் எனவும் RAW குறிப்பிட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!