டயானாவின் எம்பி பதவி தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைப்பு

#SriLanka #Court Order #Diana Gamage
Prathees
2 years ago
டயானாவின் எம்பி பதவி தொடர்பான வழக்கின்  தீர்ப்பு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, கேமா ஸ்வர்ணாதிபி மற்றும் ஏ. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் இன்று அறிவிக்கப்படவிருந்தது.

 ஆனால் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன எதிர்வரும் 31ஆம் திகதி இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பான மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்தார். இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவர், பாராளுமன்றத்தில் தெரிவு செய்ய, அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு தகுதியற்றவர் எனவும், அவரது பதவியை செல்லுபடியற்ற வகையில் ஆணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4