வீரியமடையும் கண்நோய் பரவல்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

#SriLanka #Student #doctor #Eye
Prathees
2 years ago
வீரியமடையும் கண்நோய் பரவல்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே தற்போது பரவிவரும் கண் நோய் வீரியமடைந்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 கண்நோய்க்குள்ளான மாணவர்களை பாடசாலைக்கு தவிர்த்துக்கொள்ளுமாறு அனுப்புவதை பெற்றோரை அறிவுறுத்தியுள்ள அவர், இதன் மூலம் கண்நோயை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

 கண்கள் சிவத்தல், கண்களில் இருந்து தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்றவை கண் நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சிமாவட்டத்திலும் பலபாடசாலைகளில் அதிகமானமணவர்கள்உற்பட அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் கண்நோய் தீவிரமாக பரவலடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

 தவணைப்பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தக்காலப்பகுதியில் கண்நோய்பரவலானது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை, வைரஸ் தொற்றாகப் பரவிவரும் கண் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

 அதன்படி, பெற்றோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அந்த விஷயத்தில் அதிக பொறுப்பு உள்ளது. அந்த அறிகுறிகளுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அவர் பெற்றோரிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4