எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் சிம்ம ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் சிம்ம ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: லாப ராகுவால் வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: செலவுகளை வருமானத்தால் சமாளிப்பீர்கள். நண்பர்கள் உதவியால் ஒரு முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகள் தோன்றும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி ஏற்படும்.

கடகம்

புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். துணிச்சல் அதிகரிக்கும். பூசம்: சுறு சிறப்பாக செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செயலுக்கு வரவேற்பு உண்டாகும். ஆயில்யம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்த்தவை நடந்தேறும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் சங்கடம் தோன்றும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள். சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்

சித்திரை 3,4: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சுவாதி: வேலைக்காக எதிர்பார்த்த செய்தி வரும். உங்கள் அறிவாற்றலால் நிதிநிலையில் உயர்வு உண்டாகும். விசாகம் 1,2,3: உடல்நலம் மேம்படும். நண்பர்கள் உதவியால் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். அனுஷம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். அரசு வழி முயற்சிகள் ஆதாயமாகும். கேட்டை: சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப் பார்க்க முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். உத்திராடம் 1: உங்களது கவனக்குறைவால் இன்று சில சங்கடங்களை சந்திப்பீர்கள். பேச்சில் நிதானம் அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். திருவோணம்: கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். மற்றவர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பீர்கள். சதயம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: நண்பர்கள் உதவியால் வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் கிடைக்கும்.