IMF உடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் - ஷெஹான் சேமசிங்க!

#SriLanka #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
IMF உடன்  பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் - ஷெஹான் சேமசிங்க!

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

பணிகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அந்த கலந்துரையாடலில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர்  கூறியுள்ளார். 

இதேவேளை சீனா எக்சிம் வங்கியுடன் தற்காலிக விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, 20 சதவீத குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4