நுகேகொடையில் கோர விபத்து - சாரதி நடத்துனர் தப்பி ஓட்டம்!

#SriLanka #Police #Accident #Investigation
PriyaRam
2 years ago
நுகேகொடையில் கோர விபத்து -  சாரதி நடத்துனர் தப்பி ஓட்டம்!

நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த ஜீப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றதையடுத்து பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1697708291.jpg

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரிந்த நிலையில் பேருந்தை ஓட்டுநர் செலுத்தியுள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4