இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி, 18 பேர் காயம்!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து  : ஒருவர் பலி, 18 பேர் காயம்!

நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று (19.10) மதியம் நாரம்மல, தம்பெலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்படி, சம்பவத்தைத் தொடர்ந்து 7 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4