சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த முடியவில்லை!

#SriLanka #Sri Lanka President #Parliament #IMF
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த முடியவில்லை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்திவரும் அரசாங்கத்தினால் நிபந்தனைகளில் பிரதானமான ஊழல் மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையை செயற்படுத்த முடியவில்லை என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்து பாராளுமன்ற அனுமதி கோரும் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

 சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

images/content-image/2023/10/1697763141.jpg

அதன்படியே இங்கே சட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. ஆனால் கடன் மறுசீரமைப்புக்கு எதுவும் செய்யவில்லை. மின்சார சபையின் வருமானத்தை 30 பில்லியனால் அதிகரிக்குமாறு கோரியுள்ளனர். 

இதன்படி வருமானத்தை அதிகரிக்க மின்கட்டணத்தை அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கும்.

 இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமை இங்குள் அரச நிறுவனங்கள விற்கப்படுகின்றன. இலாபமீட்டும் நிறுவனங்களும் விற்கப்படுகின்றன. 

ஆனால் சர்வதேச நாணய நிதியம் கூறும் பிரதான நிபந்தனையான ஊழல் மோசடி நிறுத்தப்படவில்லை. 

ஊழல்கள் தொடர்கின்றன. கலால் வரி திணைக்களத்தினால் போத்தல்களில் போலியாக ஒட்டப்படும் ஸ்ரிக்கர்களை தடுக்க முடியவில்லை என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4