மயிலத்தமடு பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள்தான் யாழ்ப்பாணத்தை சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? சுகாஷ் கேள்வி

#SriLanka #Batticaloa #Protest
Mayoorikka
2 years ago
மயிலத்தமடு பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள்தான் யாழ்ப்பாணத்தை சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? சுகாஷ் கேள்வி

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை கோரிய பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்றும் 36 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

 இதன்போது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் இன்றைய தினம் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தார். 

images/content-image/2023/10/1697787556.jpg

 மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் தமிழ் பண்ணையாளர்களின் உடைமைகள் எரிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றன. 

images/content-image/2023/10/1697787585.jpg

இதுதொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்ட போதும் சரியான விசாரணைகள் இதுவரை நடைபெறவில்லை.

 ஒரு சந்தேக நபர் கூட கைது செய்யப்படவில்லை. பண்ணையாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியாதவர்கள்தான், மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? இதற்கு பிற்பாடும் எதற்காக அரசாங்கத்துடன் பிள்ளையான் அங்கயன் வியாழேந்திரன் போன்றோர் ஓட்டிக் கொண்டிருக்கின்ரீர்கள் என போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சுகாஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4