மிதுன ராசியினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
மிதுன ராசியினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தை விருத்தி செய்ய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை உயரும். பரணி: விஐபிகள் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். கார்த்திகை 1: புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நேற்று ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாகனப் பயணத்திலும் இயந்திர இயக்கத்திலும் எச்சரிக்கை அவசியம். மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடைகள் உண்டானாலும் உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். புதிய முயற்சியில் லாபநிலை உண்டாகும். திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பூசம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரியாகும். நீங்கள் நினைத்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கணக்கில் வந்து சேரும். எதிர்ப்புகள் விலகும்.

சிம்மம்

மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு ஏற்படும். பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உத்திரம் 1: செயலில் உண்டான தடைகள் விலகும். புத்தி சாலித்தனத்துடன் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: தாய் வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். அஸ்தம்: விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். சித்திரை 1,2: அலைச்சல் அதிகரிக்கும். அரசு வழியில் நீங்கள் மேற்கொண்ட செயலை போராடி முடிப்பீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: குடும்ப பிரச்னை தீரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். வருமானத்தில் இருந்த தடை விலகும். விசாகம் 1,2,3: சகோதரர்கள் உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். அனுஷம்: குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் நகை, வாகனம் என்று வாங்கி மகிழ்வீர்கள். கேட்டை: உங்கள் தனித்திறமை வெளிப்படும். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும்.

தனுசு

மூலம்: அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். பூராடம்: குழப்பங்கள் விலகும். ஆதாய முயற்சிகள் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். அரசு விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. திருவோணம்: எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும் என்பதால் மனதில் குழப்பம் உண்டாகும். அலைச்சல் கூடும். அவிட்டம் 1,2: உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4: திடீர் வரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சதயம்: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி: புதிய நண்பர்கள் அறிமுகமாவர். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை உண்டாகும்.