கொழும்பின் பலப் பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர்வெட்டு!

#SriLanka #water #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பின் பலப் பகுதிகளுக்கு 15  மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று  (21.10) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அறிவிப்பின்படி இன்று மாலை 05.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.  

அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு ஆற்றல் பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4