வடக்கு வழித்தடத்தின் ரயில் நேர அட்டவணையில் மாற்றம்!

#SriLanka #Railway #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு வழித்தடத்தின் ரயில் நேர அட்டவணையில் மாற்றம்!

வடக்கு வழித்தடத்தின் ரயில் நேர அட்டவணையில் இன்று (21.10) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

யாழ்தேவி ரயில் உட்பட ஏனைய ரயில்களின் ஆரம்ப நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி பிற்பகல் 01.40 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மவுண்ட் வரை பயணித்த யாழ்தேவி புகையிரதம் இன்று முதல் காலை 10.00 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இதேவேளை, சனிக்கிழமை அதிகாலை 05.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பயணித்த புகையிரதத்தின் நேரம் காலை 05.30 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பொல்கஹவெலயில் இருந்து மஹவ சந்தி வரை காலை 05.30க்கு செல்லும் தினசரி ரயிலின் நேரம் காலை 05.25 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதற்கு மேலதிகமாக குருநாகலிலிருந்து காலை 08.55க்கு மஹவ சந்தி வரை செல்லும் தினசரி ரயிலின் நேரம் காலை 09.15 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4