யாழ்.போதனாவில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவேந்தல்!

#India #SriLanka #Jaffna #Murder #IndianArmy #memorial
PriyaRam
2 years ago
யாழ்.போதனாவில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவேந்தல்!

இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று  கடைப்பிடிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேரை சுட்டு படுகொலை செய்ததுடன் பலர் காயமடைந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 36 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

images/content-image/2023/10/1697876212.jpg

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நினைவேந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4