அரசாங்கம் நாட்டு மக்களை பெரும் சுமைக்குள் தள்ளுகின்றது! சிறிதரன் எம் பி

#SriLanka #IMF #money #sritharan
Mayoorikka
2 years ago
அரசாங்கம் நாட்டு மக்களை பெரும் சுமைக்குள் தள்ளுகின்றது! சிறிதரன் எம் பி

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமையைகொடுத்து வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 தருமபுரம் 01 அரசினர் தமிழ்களைவன் பாடசாலையின் 65 வைரவிழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். 

images/content-image/2023/10/1697879246.jpg

 தற்பொழுது அரசாங்கம் ஐ எம் எப் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமையைகொடுத்து வருகிறது. இதனால் ஜ.எம்.எப் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெறுவதற்கு மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள், சமையல் எரிவாயு என்பனவற்றின் விலைகளை தாம் நினைத்தவாறு அதிகரித்து வருகிறது. 

 தற்பொழுது இந்த நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளமோ அல்லது தனியார் ஒருவரின் நாளாந்த சம்பவமோ அதிகரிக்கப்படவில்லை. 

வெறுமனே அரசாங்கம் தான் நினைத்தவாறு பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4