நாடாளுமன்ற விசேட குழுக்கள் வழங்கிய 200 உத்தரவுகள் தூக்கி எறியப்பட்டுள்ளன!

#SriLanka #Sri Lanka President #Parliament
Mayoorikka
2 years ago
நாடாளுமன்ற விசேட குழுக்கள் வழங்கிய 200 உத்தரவுகள் தூக்கி எறியப்பட்டுள்ளன!

பல்வேறு நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுக்களின் 200க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற விசேட குழுக்களின் செயற்பாடுகளுக்காக கடந்த காலங்களில் பாரியளவில் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

 இருபது முதல் முப்பத்தி ஏழு வரையான பாராளுமன்ற விசேட குழுக்கள் சபாநாயகரால் பல்வேறு நோக்கங்களுக்காக கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டன.

 இதற்கிடையில், பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப் குழு) மற்றும் பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (கோபா குழு) ஆகியவற்றின் கிட்டத்தட்ட 300 பரிந்துரைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

 இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, குறிப்பாக நாட்டிற்கு 1600 கோடி ரூபாவிற்கும் அதிகமான சீனி வரி மோசடி தொடர்பில் கோபா குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

 அவை செயல்படுத்தப்படவில்லை. கோப் மற்றும் கோபா குழுக்கள் வழங்கிய பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் இவ்வாறு குழுக்களை நியமித்து பயனில்லை எனவும் தெரிவித்தார்.

 இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை பாராளுமன்றம் உடனடியாக தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கடந்த சில மாதங்களில் சபாநாயகர் பல்வேறு விடயங்களை ஆராய பல பாராளுமன்ற விசேட குழுக்களை நியமித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4