நவராத்திரியில் விரும்பி சாப்பிடும் வாட்டர் செஸ்ட்நட்
#Health
#Fruits
#Festival
#Benefits
#Lanka4
#ஆரோக்கியம்
#பயன்பாடு
#லங்கா4
#பழங்கள்
Mugunthan Mugunthan
1 year ago
வாட்டர் செஸ்நட் எனப்படும் கஷ்கொட்டை, பண்டிகை நாட்களில் பிரபலமான உணவாகும். இதில் சுவை மட்டுமன்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
இன்றைய பதிவில் நவராத்திரி டயட்டில் வாட்டர் செஸ்ட்நட் சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
- வாட்டர் செஸ்ட் நட் உடலுக்கு ஆற்றலை வர செய்கிறது. இது நவராத்திரி விரத காலத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவாகும்.
- இதன் காபோவைதரேட் உடலுக்கு இயற்கையான ஆற்றலை தரவல்லது.
வாட்டர் செஸ்ட்நட்டில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நவராத்திரி விரத காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்யும். இதனாலம் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
- இதில் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், அன்டி அக்ஸிண்டன்ட்ம் உள்ளது. தினமும் இதனை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையைான பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 கிடைக்கும்.
- இது கல்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். அதனால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் பேணி எலும்புருக்கி நோயை தடுக்கும்.
- இதன் அதிக நீர்ச்சத்து உள்ளடக்கம் நவராத்திரி விரத காலத்தில் உடலில் நீரேற்றத்தினை பராமரிக்க உதவக்கூடும். மேலும் சருமத்திற்கு பளபளப்பைத் தரும்.