யூதப்பேராயத்திடம் இருந்து யூத புனித உணவுச்சான்றிதழ் பெற்ற முதல் ஈழத்தமிழ் செந்தமிழ் அருட்சுனைஞர்

#Tamil People #Food #swissnews #Swiss #Tamil News #Swiss Tamil News #Bern #Synagogue #certificate #Saivaneri_Koodam #Sasikumar #Sivarusi #Shivan_Kovil
Prasu
10 months ago
யூதப்பேராயத்திடம் இருந்து யூத புனித உணவுச்சான்றிதழ் பெற்ற முதல் ஈழத்தமிழ் செந்தமிழ் அருட்சுனைஞர்

சைவநெறிக்கூடத்தின் நிறுவனர்களில் ஒருவரும், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ் அருட்சுனையர்களில் ஒருவரும், பல்சமய இல்லத்தின் பயிலரங்கு மற்றும் உள்ளப்பணியாளராகவும், சுவிற்சர்லாந்தில் 700 ஆண்டுகள் கடந்த பின்னர் பேர்ன் பல்கலைக்கழகத்தில் சமய ஆற்றுப்படுத்தலை முழுமையான பட்டயக்கல்வியாக நிறைவு செய்தவரும், செவ்வாய் முதல் வெள்ளி வரை பேர்ன் பல்சமய இல்லத்திற்காக புலால் அற்ற ஆயுர்வே சமையல் உணவமான வணக்கம் உணவகத்தின் முகாமையாளரும் சமையல் திறவோனாக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் விளங்குகின்றார்.

ஐரோப்பா நாட்டில் தமிழ் வழிபாட்டினை முதன்மைப்படுத்தி சைவத் தமிழை பரப்பி ஒழுகும் சைவநெறிக்கூடத்தின் பயிணினை தொண்டாக ஆற்றிவரும் இவர், தனது வாழ்க்கைத் தொழிலாக புலால் அற்ற சமையலைத் தெரிவுசெய்துகொண்டு பன்னாட்டவர்களும் தமிழ் உணவை விரும்பி உண்ண பேர்ன் தலை நகரில் வழிசெய்துள்ளார்.

images/content-image/1697908817.jpg

வணக்கம்» உணவகத்தில் சமைக்கப்படும் உணவு புலால் அற்றது மட்டுமல்ல, யூத சமயத்தவர்கள் உண்ணக்கூடியது என்று பேர்ன் நகர யூதர்கள் பேராயத்தால் சான்றுவழங்கப்பட்ட உணவகமாகவும் «வணக்கம்» இன்று விளங்குகின்றது. கொஷ்சர் (திருவிளங்கும் உணவு) என யூதர்களால் அழைக்கப்படும் உணவு தயாரிப்பதற்கு என்று பல நெறிகள் உண்டு.

ஒரு ஈழத்தமிழர், சைவசமயக்குரு, புலால் அற்று ஆயுள்வேதமாக தயாரிக்கும் உணவு எப்படி திருவுணவானது என்பதற்கு முன்னோட்டக்கதை ஒன்று உண்டு. ஒருமுறை வணக்கம் உணவகத்திற்கு வந்த ஒரு வெளிநாட்டவர், வணக்கம் உணவகத்தை சுறிற்றிப்பார்த்தா, சமையலறையைச் சுற்றிப் பார்த்தார், குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து பார்த்தார், பாத்திரங்களிலிருந்து பொருட்களை உற்று நோக்கினார். 

images/content-image/1697908844.jpg

இவர் உணவு ஆய்வாளராக இருப்பாரோ? என சசிக்குமார் எண்ணினார், அப்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: திரு. மைக்கேல் கோன்... பேர்ன் யூத சமூகத்தின் உதவி ரபி. (சமயக்குருவாக) புதிதாக பணிக்கு வந்துள்ளேன். எனக்கு உங்கள் ஆயுர்வேத உணவு வகைகளில் மிகுந்த விருப்பம். ஒரு ரப்பியாக (யூதுசமயக்குருவாக) மற்றும் "நவீன ஆர்த்தடாக்ஸ்" யூதராக, நாங்கள் பன்றி இறைச்சியைத் தவிர்ப்பதைத் தாண்டி, மேலும் உணவுச் சட்டங்களைக் கடைப்பிடிக்கின்றோம். 

உணவுத் தட்டில் உள்ள அனைத்தும் யூதர்களுக்கு அனுமதிக்கப்பட்ட திருவுணவாக (கோஷராக) இருக்க வேண்டும். ஆயுர்வேத உணவு கோஷராக இருக்க முடியுமா? இவ்வாறு திரு. மைக்கல் தனது கேள்விகளுடன் திரு. சசிக்குமார் அவர்களுக்கு அறிமுகமானார்.

திரு. சசிக்குமார் (சைவசமயக்குரு), திரு கை;கல் (யூதசமயக்குருவின்) பொதுவான நிலையைக் கண்டறிந்தனர்: இரண்டு சமையலறைகளிலும் தூய்மை முக்கிய பங்கு வகிக்கிறது. கோஷர் உணவுகளில் "பால்" மற்றும் "மாமிசம்" ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது!

images/content-image/1697908861.jpg

யூதசமய நெறியின்படி "நீங்கள் ஒரு குழந்தையை அதன் தாயின் பாலில் கொதிக்க வைக்கக்கூடாது." என்றார் மைக்கல், சசிக்குமார் தொடரும்போது, எனது சமையலறையில் இறைச்சி உணவுகள் சமைக்கப்படாது, நான் இங்கு சமையல் செய்தாலும், சமய ஆற்றுப்படுத்தல், பல்பண்பாட்டு ஊடாட்டர், முரண்களுக்கு தீர்வுகாணும் பணி, ஞானலிங்கேச்சுரர் கோவிலில் வழிபாடு முதல் அருளமுது படைக்கும் பணி என பன்முகம் கொண்டது என விளக்கினார்.

யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பொது இடத்தில் திருவுணவு (கோஷர்) சாப்பிட்டால் நன்றாக இருக்கும்" என்று கோன் கூறினார். சைவக்குருவானவரும், யூதக்குருவானவரும் தொடர்ந்து பலமுறை நேர்கண்டுகொண்டனர். நிறைவில் தனது புலால் அற்ற ஆயுர்வேத சமையலை யூதர்களும் உண்ணத்தக்க வகையில் திருவுணவாக்க சசிக்குமார் அவர்கள் இணங்கினார்.

திரு. மைக்கல் கோன் அனைத்து தயாரிப்புகளையும் சரிபார்த்து, உற்பத்தியாளர்கள் கோஷர் விதிமுறைகளின்படி வேலை செய்கிறார்களா என்பதை அவரது உலகளாவிய ரபிஸ் நெட்வொர்க் மூலம் தெளிவுபடுத்தி நிரலை சசிக்குமார் அவர்களிடம் அளித்தார். 

images/content-image/1697908876.jpg

பேர்ன் யூதப்பேராயத்திடம் சைவக்குருவான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் சமைக்கும் உணவு திருவுணவு (கோஷர்) என சான்றும் பெற்றுக்கொடுத்தார் திரு. மைக்கல். வயிற்றை நிரப்புவதல்ல உணவு, வாழ்நாளை நலத்துடன் நீடிக்க அடிப்படை உணவாகும், தமிழர் உணவுப்பழக்கம் பண்டைய காலத்தில் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலன் அளித்தது என மொழிந்தார் சிவருசி சசிக்குமார். 

எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் ஒரு ஒட்டுமொத்த ஆற்றல் இதுவே கடவுள் என நாம் நம்புகின்றோம், ஏகத்துவவாதி மற்றும் பலதெய்வவாதி வேறுபாடுகளும், ஏனைய ஏற்றத்தாழ்வுகளும் மாந்தர் உயிர்மெய் அன்புக்கு முன்னால் ஏதுமற்றதாகிவிடும். 2023 நடுப்பகுதியில் திரு. மைக்கல் புதிய குருப்பணி ஆணை ஏற்று நோர்வே நாட்டிற்கு மாற்றலாகிச் செல்கின்றார். 

19.10.2023 புதிய யூத சமய்குரு புதுப்பணி ஏற்கின்றார். இவரும் பல்சமய இல்லத்தில் திருவுணவு முறைமை தொடர வேண்டியுள்ளார். சுவிற்சர்லர்நதில் பேர்ன் நகரில் நாம் நுகர்கின்ற மானிடம், நற்சூழல் இணக்கம் தொடர இயற்கை வல்லமை தரட்டும்.