இரத்த வெள்ளத்தில் மிதக்கும் தமிழ் திரையரங்குகள் - திருந்துமா தமிழ் சினிமா?

#Actor #Actress #TamilCinema #Director #Tamil #theaters #Fans
Prasu
1 year ago
இரத்த வெள்ளத்தில் மிதக்கும் தமிழ் திரையரங்குகள் - திருந்துமா தமிழ் சினிமா?

தமிழ் சினிமாவின் வெகுசனப் பரப்பில்,அதாவது கமர்சியல் மெய்ன் ஸ்ட்ரீம் சினிமாவில் ஒரு மரபு உண்டு. அது எம்ஜிஆர் காலத்து மரபு. கமர்சியலுக்கு எம்ஜிஆர், ஆர்ட் க்கு சிவாஜி. அது அப்படியே ரஜினி - கமல் என்றானது. பிறகு விஜய் - அஜித் . தனுஷ் -சிம்பு என நைந்தது. இப்போது குபீரென ஆர்ட் மற்றும் கமர்சியல் கீரோக்கள் இருவருமே இணைந்து துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கையில் எடுக்கிறார்கள். 

திரையெங்கும் ரத்தம் தெறிக்கிறது. இவ்வளவு ரத்த வெறிகளைப் பார்க்கவா நாங்கள் குடும்பம் குட்டிகளோடு ஏராளமான நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறோம் என்பதை நினைக்கவே கோராமையாக இருக்கிறது. ஹீரோயிசத்துக்கு எதிரான நாமே சில கருணைகளுக்கு பிறகு "சனியன்களே நீங்கள் எம்ஜார் ஹீரோயிசத்தைக் காண்பித்தால் போதாதா?" என்கிற நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்.

images/content-image/1697912644.jpg

சமகாலத்தில் லோகேஷ் எனும் இயக்குநரின் பொறுப்பற்ற அனுகுமுறை, கமல் போன்ற கலை ஆட்களையும் விஜய் போன்ற வெகுசன ஆட்களையும் ஒரே தராசில் வைக்கிறது. இருவருமே ரத்தத்தை தெறிக்க விடுகிறார்கள். அடப்பாவிகளா என நாம் வாய் பிளந்து நிற்கிறோம்.

இந்த லோகேஷ் அவ்வளவு வொர்த் ஆ எனத் தெரிந்து கொள்ள விக்ரமை முதல் நாள் பார்த்த நாம், லியோவுக்கும் முதல் நாள் செல்கிறோம். இந்த 'க்ரேட் லோகேஷ்' History of Violence படத்தைத்தான் அப்படியே சுட்டு வைத்திருக்கிறார். முறையாக அனுமதி வாங்கியிருப்பதாக நண்பர் ஒருவர் சொல்கிறார். இந்த ரீ- கிரியேஷனில் என்ன க்ரியேட்டிவிட்டி இருக்கிறது. HOV யில் மான், இதில் 'ஹனா'. இப்படி மாற்றியடித்தவருக்கு படிக்கட்டுக் கலவியை உல்டாவாக்கும் தில் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை. 

images/content-image/1697912661.jpg

நான் உட்பட அனைத்து HOV ரசிகர்களும் அந்தப் படிக்கட்டுக் கலவிக்கு அடிமை. இந்த லோகேஷ் அதை அப்படியே கொண்டு வந்திருந்தால் இந்த எழவே வந்திருக்காது. ஆனால் இவர்கள்தான் சமகால சினிமா மேக்கர்கள் என்றால் இந்தச் சூழலில் புழங்குவதற்கே அவமானமாக இருக்கிறது. 

இதையெல்லாம் பார்த்து இப்படி எழுதவும் கேவலமாக இருக்கிறது. இதில் இந்த லோகேஷ் கெத்தாக பேட்டி கொடுக்கிறார். பத்து சினிமாதான் பண்ணுவாராம். அது LCU வாம். அடப்பாவிகளா சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற சொல்லுக்கு அர்த்தமாவது இவருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. 

images/content-image/1697912677.jpg

இந்த லோகேஷை இரும்புக் கம்பியில் கட்டிப் போட்டு, ஆயிரம் பீரங்கிகளின் முன்னிலையில், அதாவது அசைந்தால் அத்தனையும் வெடிக்கும் என்கிற நிர்பந்தனையில் போலந்து இயக்குநர் கீஸ்லோவெஸ்கி யின் ரெட் - ப்ளூ- வெய்ட் படங்களை குறைந்தது ஆயிரம் முறை பார்க்கை வைத்து, சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் என்ன என்பதை நாம் சொல்லித் தர வேண்டும். அதுதான் இந்த லோகேஷ் நமக்குக் கொடுத்த லியோ கொடுமையின் சரியான பரிகாரமாக இருக்க முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!