பிற்பகல் வேளையில் இலங்கையின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிற்பகல் வேளையில் இலங்கையின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மேல், தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் முன்னுரைத்துள்ளது. 

அதேபோல் மேற்கு, சப்ரகமுவ, ஊவா, மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ மேல் பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4