அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

#SriLanka #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதில் மூவர் காயமடைந்த நிலையல், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 4 மாதக் குழந்தை ஆகியோரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இனம் தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4