டெலிகொம் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான தொழில்சார் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news
Thamilini
2 years ago
டெலிகொம் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான தொழில்சார் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக கடுமையான தொழில்சார் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்த நாட்களில் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர்  ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.  

"டெலிகாம் நிறுவனத்தின் மதிப்பை நிர்ணயிக்க சர்வதேச நிதிக் கழகம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  உலக வங்கியுடன் தொடர்புடைய இந்நிறுவனமானது தனியாருக்கு கடன் வழங்குகின்றன. 

பின்னர் அந்த  நிறுவனத்தை கொண்டு வந்து டெலிகாம் நிறுவனத்தின் சொத்துகளை கணக்கிடுகிறார்கள்.. இது மிகப்பெரிய மோசடியாக இருக்கும் என்பதை நாம் தெளிவாக பார்க்க முடியும் என டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ஜகத் குருசிங்க மேலும் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4