காணாமல்போன மாகாண சபை தேர்தலும், புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காணாமல்போன மாகாண சபை தேர்தலும், புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும்!

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அரசாங்கம் முன்னர் கைவிட்ட தேர்தல்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மகிந்த தேசப்பிரிய மேற்படி கூறியுள்ளார். 

மேலும் தெரிவித்த அவர்,  ஆறுமாதங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை ஆணைக்குழு பூர்த்தி செய்வது மிகவும் கடினம் எனவும் பல மணித்தியாலங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். 

 ஒருவருட காலத்திற்கு கூட இது நீடிக்கலாம் எனத் தெரிவித்த அவர், சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை, அவை இந்த காலத்தின் தேவை என்றும் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும்  இவற்றிற்கு முன்னர்  காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் நடத்தப்படவேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4