‛வித்தைக்காரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
‛வித்தைக்காரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

காமெடி நடிகர் சதீஷ், நாய் சேகர் படத்தில் கதாநாயகனாக நடித்ததை தொடர்ந்து தற்போது 'வித்தைக்காரன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் வெங்கி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு வி.பி.ஆர். இசையமைத்துள்ளார். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'லைஃப் இஸ் மேஜிக்' என்ற இந்த பாடலை முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டுள்ளனர். கவிஞர் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை நரேஷ் ஐயர் பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4