ஆயுத பூஜை அன்று வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம் என்ன?
இந்த வருட ஆயுத பூஜையானது நாளை கொண்டாடபட இருக்கிறது. அதாவது, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜை. நாளைய தினம் நம்முடைய வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம் என்ன?
கட்டாயமாக பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன. நாளைய தினம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை வழிபாடு செய்ய வேண்டிய நேரம்?
நாளைய தினம் காலை 6.00 மணியிலிருந்து 7.20 வரை நல்ல நேரம். அப்படி அந்த நேரத்தை தவறவிட்டவர்கள் காலை 9.05 மணி முதல் 10.20 மணி வரை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
அந்த நேரமும் ஆயுத பூஜை வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள் மதியம் 12.00 மணியிலிருந்து 1:25 மணி வரை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நாளை மாலை 6.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உங்களுடைய வீட்டில் வழிபாடு செய்யலாம்.
நாளை பூஜையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன?
நாளைய தினம் கட்டாயமாக குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகத்தை பூஜையறையில் வைப்போம். அது நாம் எல்லோருக்கும் தெரியும். அது தவிர வீட்டில் நீங்கள் படிக்கும் ஆன்மீகம் சார்ந்த மற்ற புத்தகங்கள் ஏதாவது இருந்தால் அந்த புத்தகத்தையும் நாளை பூஜை அறையில் வைக்கலாம்.
ராமாயணம், மகாபாரதம் அல்லது திருக்குறள் புத்தகம் இப்படி மற்ற புத்தகங்களையும் பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. இது தவிர சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி, அருவா, கொடுவா, அருவாமனை, கத்தி, கத்திரிக்கோல், போன்ற பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.
சில பேர் சில பொருட்களை பயன்படுத்தாமல் பரண்மேல் வைத்திருப்பார்கள். தாத்தா பாட்டி பயன்படுத்திய சாதனங்கள். பெரிய கொடுவா, பெரிய கத்தி, அருவாமனை, எல்லாம். அதையெல்லாம் எடுத்து நாளை சுத்தம் செய்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப. இதோடு சேர்த்து அரிசி அளப்பதற்கு பயன்படுத்தும் படி, அரைப்படி, ஆழாக்கு என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த பொருட்களையும் பூஜையில் வைக்க வேண்டும்.
குறிப்பாக உங்க வீட்டில் சின்னதாக உரல், அம்மிக்கல், ஆட்டுக்கல் ஏதாவது மிகச்சிறிய அளவில் வைத்திருந்தீர்கள் என்றால் அதை சுத்தம் செய்தும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். எல்லா பொருட்களையும் மொத்தமாக காலியாக வைக்க வேண்டாம்.
படி, அரைப்படி, அஞ்சறைப் பட்டியில் ஒரு சில சின்ன சின்ன தானியங்களை அரிசி பருப்பை உள்ளே போட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சரஸ்வதி காயத்ரி மந்திரம்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
சரஸ்வதி ஸ்லோகம்
“ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே”
இந்த மந்திரத்தை படிக்கும் பிள்ளைகள் தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. படிக்கும் பிள்ளைகளும் இந்த மந்திரத்தை சொல்லலாம். வேலையில் திறம்பட தொழிலில் முன்னேற வேண்டும் என்பவர்களும் இந்த மந்திரத்தை நாளை உச்சரித்து பலன் பெறலாம்.
சரஸ்வதி தேவி உங்களுக்கு உண்டான அருளாசியை வழங்க அவளை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.