நில்வல ஆற்றை அண்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Flood #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நில்வல ஆற்றை அண்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நில்வலா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. 

கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வல கங்கை கசிவுப் பாதைக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும். 

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதேவேளை, கடும் மழை காரணமாக கிரிலிப்பனவில் இருந்து மாத்தறை - கொட்டபால வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கிரிலிப்பன பிரதேசத்தில் இருந்து மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளதாகவும், சிறிய வாகனம் கூட அப்பகுதி வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4