230 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
230 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

230 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்தோனேசிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (22.10) பிற்பகல் இலங்கை வந்தடைந்த அவர்,  அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு இடையில்4 கிலோ 598 கிராம் கொக்கேயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தோனேசியப் பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து கத்தாரின் தோஹா விமான நிலையம் வழியாக இந்த நாட்டிற்கு வந்துள்ளார்.  

இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!