மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!
#India
#SriLanka
#Arrest
#Police
#Investigation
PriyaRam
1 year ago

இலங்கையர்கள் 61 பேரை 2021ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் 39 வயதான மொஹமட் இம்ரான்கான் என்ற குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ஈசான் என்ற இலங்கையருடன் இணைந்து மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



