சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட கெஹலிய!

#SriLanka #Keheliya Rambukwella #Minister
PriyaRam
2 years ago
சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட கெஹலிய!

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் சற்றுமுன்னர் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/10/1698045482.jpg

இந்நிலையில் ரமேஷ் பத்திரனவிற்கு கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு நிதி இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் வழங்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1698045524.jpg

images/content-image/2023/10/1698045550.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4