ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வடிவேல் சுரேஸ் நீக்கம்: மேலும் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

#SriLanka #Sri Lanka President #Badulla #SLPP
Mayoorikka
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வடிவேல் சுரேஸ் நீக்கம்: மேலும் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சி தீர்மானித்துள்ளது.

 அத்துடன் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி மற்றும் அரவிந்த குமார் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தவும் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

images/content-image/2023/10/1698040534.jpg

 பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கட்சியின் தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 கட்சியின் ஆசன மட்டத்தை திறம்பட ஒழுங்கமைக்க முடியாத ஆசன அமைப்பாளர்களுக்கு மாற்று வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4