செந்தில் தொண்டமான் மற்றும் பாகிஸ்தான் சிந் மாநில முதலமைச்சர் இடையே முக்கிய கலந்துரையாடல்!

#SriLanka #China #Pakistan
PriyaRam
2 years ago
செந்தில் தொண்டமான் மற்றும் பாகிஸ்தான் சிந் மாநில முதலமைச்சர் இடையே முக்கிய கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1698047468.jpg

அத்துடன், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள், அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் செந்தில் தொண்டமான் சிந் மாநில முதலமைச்சரிடம் கலந்துரையாடியுள்ளார்.

செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதலமைச்சர் மக்பூல் பக்காரு ஒப்புக்கொண்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பாகிஸ்தானில் உள்ள சிந் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு சிந் மாநில முதலமைச்சர் அழைப்பும் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4