மக்காச் சோள பணியாரம் செய்யும் முறை

#Recipe #Cooking #Food #2023 #Tamil Food
Mani
2 years ago
மக்காச் சோள பணியாரம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

1/4 கிலோ மக்காச்சோளம்

1 கப் உளுத்தம் பருப்பு

1 டீஸ்பூன் வெந்தயம்

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை:

  • மக்காச்சோளத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  • வழக்கமாக அரைப்பது போல் உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. மக்காச்சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • அரைத்தஉளுந்து மாவுடன் மக்காச்சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிட வேண்டும். மறுநாள் நேரம் புளித்து தயாராக இருக்கும்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, மக்காச்சோள பணியார மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்ற ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்ற வேண்டும்.
  • ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்க வேண்டும். சுவையான மசாலா சேர்த்த மக்காச் சோள பணியாரம் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4